2025 மே 15, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் தெடர்ந்தும் போராட்டம்

வா.கிருஸ்ணா   / 2018 ஒக்டோபர் 24 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புப் போராட்டத்துக்கு ஆதரவாக வட, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு, ஆசிரிய கலாசாலையின் மாணவர்கள் இணைந்து ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டமொன்று, மட்டக்களப்பு புகையிரத நிலையத்துக்கு முன்பாக இன்று (24) காலை நடைபெற்றது.

“நாட்டின் முதுகெழும்பை களையறுக்காதே”, “அடிப்படை சம்பளத்தை 1,000 ரூபாயாக மாற்று”,“மாற்றமுறும் மலையகத்துக்கு நமக்காக நாம்”, “ஒன்றிணைந்து போராடுவோம் - நாளை நமதே” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

நாட்டின் பொருளாதாரத்துக்கு உந்து சக்தியாகத் திகழும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக தேயிலைக்கு உரமாக்கப்பட்டே வருவதாகவும் அவர்களின் வாழ்க்கை தொடர்பில் யாரும் அக்கரை செலுத்துவதில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கவலை தெரிவித்தனர்.

மேலும், இத்தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்படுமானால், நாடளாவிய ரீதியில் ஆசிரிய மாணவர்களை இணைத்துப் போராடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .