Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 ஒக்டோபர் 25 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
மட்டக்களப்பு நீதிமன்ற கட்டட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக, நேற்று (24) இரவு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி ஊடாக வந்த இந்த மிரட்டலால், அந்தப் பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நீதிமன்ற கட்டட தொகுதியை குண்டுவைத்து தகர்த்த போவதாக, நீதிமன்ற பதிவாளருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று நேற்று இரவு வந்துள்ளது.
இதையடுத்து, இது தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு அறித்தார்.
இதை தொடர்ந்து, நீதிமன்ற கட்டட தொகுதிக்கு பொலிஸ் உயர் அதிகாரிகள் சென்று பார்வையிட்டதுடன், கட்டித்தை சுற்றிவர உள்ள பகுதிகளுக்கு, பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன், அந்தப் பகுதியில் விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதுடன் புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும், இன்றிலிருந்து, இந்த பகுதியை விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர்.
இதேவேளை, மட்டக்களப்பில் சீயோன் தேவலாய தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்ட ஸாரான் காசிமின் ஐ.எஸ்.ஐ.எஸ் என சந்தேகிக்கப்படும் பலரது மற்றும் பிரதான சூத்திரதாரிகளின் வழக்கு இந்த நீதிமன்றில் இடம்பெற்று வருவதுடன், அந்த வழக்கின் ஆவணங்கள் இந்த நீதிமன்ற கட்டிட தொகுதி களஞ்சிய அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(AN)
20 minute ago
35 minute ago
53 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
35 minute ago
53 minute ago
57 minute ago