Lenin Raj / 2026 ஏப்ரல் 30 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

19 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 42 ஆவது லீக் போட்டியில், முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
19 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நான்கு வெற்றிகள், நான்கு தோல்விகளைப் பதிவு செய்துள்ள குஜராத் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்திய உற்சாகத்துடன் இன்று களம் இறங்குகின்றது.
அதேநேரம் 8 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றிகளைப் பதிவு செய்து, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.
இறுதியாக டெல்லி அணியைக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையில் சுருட்டியதும் ரோயல் சேலஞ்சர்ஸ் அணிதான்.
ரோயல்செலஞ்சர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் 7 முறைகள் நேருக்கு நேர் சந்தித்தன. அதில் பெங்களூரு அணி 4 தடவைகளும், குஜராத் அணி 3 தடவைகளும் வெற்றிகளைப் பதிவு செய்துகொண்டன.
குஜராத் அணி இறுதியாகப் பெங்களூர் அணியுடன் மோதியபோது 206 ஓட்டங்களைப் பெற்றது. அது இலகுவான ஓட்ட எண்ணிக்கை இல்லை என்றாலும், அதனை விரட்டி இலக்கினை அடைந்து குஜராத் அணியை வலுவிழக்கச் செய்தது பெங்களூரு அணி. அதற்கு இன்றைய போட்டியில் குஜராத் பெங்களூரைப் பழிவாங்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
49 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago