Editorial / 2026 ஏப்ரல் 30 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

தெற்காசியாவிலேயே முதன்முறையாக நடத்தப்படும் “ஒன் லவ் ரெகே இசை விழா” (One Love Reggae Festival), எதிர்வரும் 2026 ஆகஸ்ட் 7 முதல் 9 ஆம் திகதி வரை பெந்தோட்டை கடற்கரையில் நடைபெறும் என அதன் ஏற்பாட்டாளர்கள் நேற்று அறிவித்தனர்.
இந்த இசை விழாவில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற 9 பழம்பெரும் 'ரெகே' (Reggae) கலைஞர்கள் முதன்மைப் பாடகர்களாகக் கலந்துகொள்ளவுள்ளனர். இது இப்பிராந்தியத்தில் இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய ரெகே இசைச் சங்கமங்களில் ஒன்றாக அமையவுள்ளது. தினமும் மாலை 5.00 மணி முதல் ஆரம்பமாகவுள்ள இவ்விழாவில், ரசிகர்கள் மூன்று நாட்களுக்கு துடிப்புமிக்க இசை, கலாசார வெளிப்பாடுகள் மற்றும் ஒற்றுமையின் உன்னதத்தை எதிர்பார்க்கலாம்.
பெந்தோட்டையின் அழகான கடற்கரைச் சூழலை பின்னணியாகக் கொண்டு நடத்தப்படும் இந்த 'ஒன் லவ் ரெகே இசை விழா 2026', இலங்கைக்கும் தெற்காசிய பிராந்தியத்திற்கும் ஒரு மைல்கல் போன்ற சர்வதேச இசை மற்றும் கலாசார அனுபவமாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
பாப் மார்லி (Bob Marley) மற்றும் 'த வெய்லர்ஸ்' (The Wailers) போன்ற ரெகே இசைக் குறியீடுகளின் காலத்தால் அழியாத மரபுகளுக்கும், பீட்டர் தோஷ் (Peter Tosh), பன்னி வெய்லர் (Bunny Wailer) மற்றும் கிரிகோரி ஐசக்ஸ் (Gregory Isaacs) போன்ற முன்னோடிகளுக்கும் இந்த விழா பெருமையுடன் மதிப்பளிக்கிறது. அவர்களின் உலகளாவிய இசைத் தாக்கம், அமைதி, அன்பு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை இவ்விழா கௌரவிக்கின்றது.
அன்பு, பன்முகத்தன்மை மற்றும் ஒன்றிணைந்த வாழ்வைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த 'ஒன் லவ் ரெகே இசை விழா', இலங்கையை சர்வதேச பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் துறையில் ஒரு துடிப்புமிக்க இடமாக நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமச்சீர் விலைப்பொதி நுழைவுச்சீட்டுகள் (Flat rate tickets) மற்றும் ஹோட்டல் வசதிகள் உள்ளடங்கிய பொதிகள், 2026 மே மாதம் முதலாம் வாரத்திலிருந்து www.onelove.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகக் கிடைக்கும். அத்துடன், முன்கூட்டியே பதிவு செய்வோருக்கான (Early bird offers) விசேட சலுகைகளும் வழங்கப்படவுள்ளன.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago