Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2021 மார்ச் 08 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்
இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு பஸ் டிப்போ முகாமையாளரை இடமாற்றக் கோரி, அங்குள்ள ஊழியர்கள் சிலர், இன்று (08) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டிப்போவின் பிரதான நுழைவாயிலை மூடியவாறு, பதாதைகளை ஏந்தி ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“முகாமையாளரே நாங்கள் அடிமைகள் அல்லர்”, “தொழில் சங்கத்துக்கு இலஞ்சம் கொடுத்து, தொழிலாளர்களை பழிவாங்காதே”, “அரக்கன் செயலாற்று முகாமையாளரை வெளியேற்று”, “தங்களது அடியாட்களை சாலை வளாகத்தினுள் அடாவடித்தனம் புரிய இடமளியாதே” போன்ற பதாதைகளை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற போதிலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் நலன்கருதி, பஸ் சேவைகள் வழமை போன்று இடம்பெற அனுமதித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
ஸ்தலத்துக்கு விரைந்த மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.ஹெட்டியாராச்சி தலைமையிலான பொலிஸார், ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் விடயங்களைக் கேட்டறிந்தனர்.
இது குறித்து பஸ் டிப்போ முகாமையாளரிடம் கேட்டபோது, 198 ஊழியர்கள் இங்கு கடமை புரிகின்றனர். அவர்களுள் ஒழுக்காற்று விசாரணைக்கு உட்பட்ட ஊழியர்களே இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.
இந்த முகாமையாளர், கடந்த காலத்தில் இதே சாலை முகாமையாளராகப் பணிபுரிந்து இஞ்ச மோசடி தொடர்பாக இடைநிறுத்தப்பட்டு, கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் மீண்டும் முகாமையாளராக கடமையேற்ற நிலையில், இவருக்கு எதிராக ஒரு பகுதி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago