Princiya Dixci / 2021 ஜனவரி 19 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களால், இன்று (19) காலை 10 மணி தொடக்கம் 11 மணி வரையில் ஒரு மணி நேர பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வைத்தியசாலையின் வைத்திய சேவைக்குப் பாதிப்பில்லாமல், அரச தாதியர் சங்கம், பொதுச் சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கம் என்பன இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தன.
மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் தாதியர் ஒருவர் கொரொனா நோயாளியாக இனங்காணப்பட்ட நிலையில், அவர் சிகிச்சைக்காக காத்தான்குடி வைத்தியசாலையிலுள்ள தாதியர்களுக்கான சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பிவைக்கப்பட்டபோது, மட்டக்களப்பு தாதியர்களுக்கு இங்கு இடமில்லை, காத்தான்குடி தாதியர்கள்தான் இங்கு இடமொதுக்கப்பட்டுள்ளது என காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜாபீரினால் தெரிவிக்கப்பட்டதாக, பொதுச் சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் பி.புஸ்பராஜா தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களுக்கு கொரொனா தொற்று ஏற்படுமிடத்து, அவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலேயே ஓர் இடத்தை ஒதுக்கி சிகிச்சை வழங்குமாறு வலியுறுத்தியும் கொரொனா சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதியர்களுக்கு விசெட சலுகைகளை வழங்குமாறு வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பொதுச் சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் நா.சசிகரன் உட்பட மாவட்ட தலைவர்கள், தாதியர்கள் என பெருமளவானோர் இந்தப் போராட்டத்தில் இணைந்திருந்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள வைத்தியசாலை நிர்வாக கட்டடத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய தாதியர்கள், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு, போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தமது கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்காவிட்டால் தொடர்ச்சியான பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவேண்டிய நிலையேற்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
மட்டகளப்பு போதனா வைத்தியசாலையில் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொற்றுக்குள்ளான நிலையில், நேற்று முன்தினம் (17) மேற்படி தாதி தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளது.
7 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago