எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 பெப்ரவரி 28 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாநகர சபைக்கு, ஐக்கிய தேசியக் கட்சியினூடாக முஸ்லிம் பெண்ணொருவரை உறுப்பினராக நியமிக்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.எஸ்.சாபி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் இணைப்பாளர்களுக்கான கூட்டம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், நேற்று (27) நடைபெற்ற போதே, மேற்படி வேண்டுகோளை இணைப்பாளர் விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்துள்ள மேலதிக ஆசனங்களுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வது தொடர்பாக ஆராயப்பட்டது.
இந்த நிலையில், மட்டக்களப்பு மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்துள்ள 4 மேலதிக ஆசனங்களுக்கு, உறுப்பினர்களைத் தெரிவு செய்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இந்த 4 உறுப்பினர்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபை வேட்பாளர் பட்டியலில் மேலதிக வேட்பாளர் பட்டியலிலுள்ள முஸ்லிம் பெண்ணொருவரையும், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினராக நியமிக்குமாறு, எம்.எஸ்.சாபி வேண்டுகோளையொன்றை விடுத்தார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த இணைப்பாளர் சாபி, “மட்டக்களப்பு மாநகர சபை பிரிவில் பல முஸ்லிம் கிராமங்கள் உள்ளன. அவைகளை உள்ளடக்கியதாக முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு இந்த வாய்ப்பை, ஐக்கிய தேசியக் கட்சி வழங்க வேண்டும். அதற்காக ஒரு பெண் உறுப்பினரை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
“இல்லையேல் மட்டக்களப்பு மாநகர சபை பிரிவிலுள்ள முஸ்லிம் கிராமங்களை உள்ளடக்கியதான, தனியானதொரு பிரதேச சபையை உருவாக்கித் தர வேண்டும் என்பதையும் கோரிக்கையாக விடுக்கின்றேன்" என்று குறிப்பிட்டார்.
இது தொடர்பில் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாக, அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார் என, அவர் மேலும் குறிப்பிட்டார்.
7 minute ago
16 minute ago
21 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
21 minute ago
2 hours ago