2025 மே 01, வியாழக்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு பரவல் தீவிரம்

Princiya Dixci   / 2021 மார்ச் 17 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான், க.விஜயரெத்தினம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குப் பரவல் வேகமாக அதிகரித்து வருகின்றது. இம்மாதம் 05ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை 90 பேர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர். 

மண்முனை வடக்கு, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 24 நோயாளர்களும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 நோயாளர்களும், வாழைச்சேனை, ஏறாவூர் நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 10 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
 
அத்துடன், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 நோயாளர்களும், கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 நோயாளர்களும், ஓட்டமாவடி, களுவாஞ்சிகுடி, கோரளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 04 நோயாளர்களும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 நோயாளர்களும், வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 நோயாளர்களுமாக மொத்தம் 90 பேர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர். 

இவ்வருடம் டெங்குக் காய்ச்சலால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 03 எனவும் டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை  2,288 எனவும் சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை, பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு, வீடுகளில் தேங்கிகிடக்கின்ற குப்பைகள், நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி, டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காதவகையில் சூழலைத் துப்பரவாக வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .