Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஒக்டோபர் 17 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில், மாதிரி பொலிஸ் நிலையமாக, வாகரை பொலிஸ் நிலையம் தெரிவுசெய்யப்பட்டிருப்பதாக, வாகரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.என்.ஐ. திஸாநாயக்க தெரிவித்தார்.
இலங்கையில் பொலிஸ் சேவைகளின் தரத்தை உயர்தரத்தில் மேம்படுத்துவதற்காக, இவ்வாறு 45 பொலிஸ் நிலையங்கள், மாதிரி பொலிஸ் நிலையங்களாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
வாகரை பொலிஸ் நிலையம், மாதிரி பொலிஸ் நிலையமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதையடுத்து, வாகரைப் பிரதேசப் பொதுமக்கள், சிவில் சமூக அமைப்புகள், சிவில் பாதுகாப்புக் குழுக்கள், ஆலோசனைக் குழுக்கள் ஆகியவற்றின் பிரதிநிகளுடனான பரஸ்பர ஒத்துழைப்புக் கலந்துரையாடலொன்று, வாகரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திஸாநாயக்க தலைமையில் இன்று (17) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட சிவில் சமூகப் பிரதிநிதிகளும் பொலிஸ் தரப்பு அதிகாரிகளும், வாகரைப் பிரதேசத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை மேம்படுத்துவது தொடர்பிலும், சட்டத்தையும் ஒழுங்கையும் அமுல்படுத்தி குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலும், இயற்கை - செயற்கை இடர்களின்போது செய்யப்படவேண்டிய முன்னாயத்தங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினர்.
பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவை நெருக்கமாகப் பேணுவதன் மூலம், சமூகப் பதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் எனவும், பரஸ்பரம் கலந்துரையாடப்பட்டது.
மேலும், வாகரை பொலிஸ் நிலையத்தை நாடிவரும் பொதுமக்களின் நலனோம்பு விடங்களிலும், குறிப்பாக பெண்கள், யுவதிகள், சிறுவர்கள், பாலூட்டும் தாய்மார் ஆகியோரின் முறைப்பாடுகள் குறித்து முன்னுரிமையின் அடிப்படையில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், இங்கு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.
8 hours ago
9 hours ago
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
29 Aug 2025