Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ், ஏ.எச்.ஏ. ஹுஸைன், வ.சக்தி
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருகின்ற அடைமழையால் ஆறு பிரதேச செயலகங்களில் வசிக்கும் 1,050 குடும்பங்களைச் சேர்ந்த 3,765 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.
இடம்பெயர்ந்தவர்கள், தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனரெனவும் இன்று (02) பகல் மாவட்டச் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மண்முனை வடக்கு, காத்தான்குடி, ஆரையம்பதி, கிரான், வாழைச்சேனை, வெல்லாவெளி ஆகிய பிரதேசங்களில் இத்தகைய இடம்பெயர்வுகள் இடம்பெற்றுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களைத் தற்காலிக முகாம்களில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சமைத்த உணவுகள், குடிநீர், ஏனைய அடிப்படை வசதிகளை அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் பணிப்புரைக்கமைவாக, மாவட்டத் தேசிய அனர்த்த நிவாரண நிலையத்தினுடாக வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட அனர்த்த நிலையப்பணிப்பாளர் ஏ.எம்.எஸ் சியாத் தெரிவித்தார்.
தாழ் நில பிரதேசங்களில் வீதிக்கு ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதனால் போக்குவரத்துக்கு சிரமப்பட்டு வருவதாகவும் இதன்காரணமாக கிரான் பகுதிக்கு இயந்திரப்படகுகள் ஈடுப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் மேலும் அனர்த்தத்தால் ஏற்படுகின்ற பாதிப்பைக் குறைப்பதற்கு கடற்படையினரின் உதவியும் ஏனைய படையினரும் உதவுவதற்கு ஆயுத்தமான நிலையில் உள்ளதாகவும் அரசாங்க அதிபர் உதயகுமார் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
05 Jul 2025