2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மட்டு. சிறைச்சாலையில் இரண்டாங்கட்டமாக 19 கைதிகள் பிணையில் விடுவிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 19 சிறைக்கைதிகள், இன்று (01) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று, மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியடசகர் எஸ்.எல்.விஜயசேகர தெரிவித்தார் 

சிறைச்சாலை அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக, சிறுகுற்றங்கள் புரிந்த நிலையில், சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள்,  நீதவான்களின் உத்தரவுக்கு அமைய பிணையில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் முதற்கட்டமாக,  162 சிறைக்கைதிகள், திங்கட்கிழமை (30) பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இரண்டாங்கட்டமாக 19 பேர் இன்று (1) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து இதுவரை 181 சிறைக்கைதிகள், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X