Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Yuganthini / 2017 செப்டெம்பர் 11 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், கே.எல்ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாநகர சபை பிரிவில் கழிவகற்றல் செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டுமென வலியுறுத்தி, மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவுக்கு முன்னால் இன்று (11) ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்புகளின் சம்மேளனம் என்பன இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
கடந்த இரு வாரங்களுக்கு மேலாக மட்டக்களப்பு மாநகர சபையால் மட்டக்களப்பு மாநகர சபை பகுதியில் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் கழிவகற்றல் நடவடிக்கையானது நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதனால் மட்டக்களப்பு மாநகரின் சூழலும் எழிலும் மாசடைந்து வருவதுடன், மழை காலம் ஆரம்பித்துள்ளதால் டெங்கு நுளம்புப் பெருக்கமும் தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயமும் அதிகமாகக் காணப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
இதனைக் கருத்திற்கொண்டு, மட்டக்களப்பு மாநகரின் எழிலையும் சூழலையும் பாதுகாக்கவும் மட்டக்களப்பு மாநகர சபையால் கழிவகற்றல் நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுவதற்கு ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், மட்டக்களப்பு மாநகர சபைக்கு கோரிக்கை விடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் பின்னர் மட்டக்களப்பு மாநகர ஆணையாளரிடம் இது தொடர்பான கோரிக்கைக் கடிதமொன்று கையளிக்கப்பட்டதுடன், அதன் பிரதிகள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருகோணமலை, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மட்டக்களப்பு, மாவட்டச் செயலாளர், பொறுப்பதிகாரி சூழல் பாதுகாப்பு அதிகார சபை மட்டக்களப்பு ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago