Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 25 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பைப் பொறுத்த வரையில், 11 சதவீதமான அளவுதான் தங்களுடைய பிரிவுகளில் காடுகள் காணப்படுவதாகத் தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மா.உதயகுமார், காடுகளின் அளவை அதிகரிக்கும் முயற்சியை வரவேற்றுள்ளார்.
மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள எல்லைக் கிராமங்களான றாணமடு, மாலையர்கட்டு, சின்னவத்தை, பாலையடிவட்டை, கண்ணபுரம், செல்வாபுரம் போன்ற பிரிவுகளில், ஒரு இலட்சம் பனை விதைகள் நடும் வேலைத்திட்டம், பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகியின் தலைமையில், நேற்று (24) நடைபெற்றது.
இவ்வேலைத்திட்டம், அக்ரா நிறுவனத்துடன் இணைந்து, பனை விதைகள் சேகரிக்கப்பட்டு, எல்லைப்புறங்களான இப்பிரதேசங்கில் நடுவதன் மூலம், யானைகள் வருவதைத் தடுக்கமுடியும் என்பதற்காக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மாவட்ட செயலாளர், "மூதாதைகள் எவ்வாறு எங்களுக்கு இயற்கையைக் கையளித்தார்களோ, அதைவிடச் சிறப்பாக, எதிர்காலச் சந்ததிகளுக்கு அந்த இயற்கையை நாங்கள் கையளிக்க வேண்டிய தேவையுள்ளது" எனத் தெரிவித்தார்.
இவ்வாறான தேவையை உணர்ந்து, இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பித்தமைக்காக பிரதேச செயலாளர், அக்ரா நிறுவனம், அதனுடைய ஆலோசகர் ஆகியோருக்கு, பாராட்டுகளையும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ், “வனரோபா” என்ற பெயரிலே, ஓக்டோபர் மாதம் 01ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை, இலங்கையில் தேசிய மரநடுகை மாதம், மகாவலி நீர்ப்பாசன அமைச்சினூடாகச் செற்படுத்தப்படுகிறது.
இலங்கை நிலப்பரப்பில், காடுகளின் அளவை 32 சதவீதமாக அதிகரிக்கவேண்டுமென்பதே இதன் நோக்கமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago