Princiya Dixci / 2021 ஜனவரி 31 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.சரவணன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு வாவியருகே ஆணொருவரின் சடலம் இன்று (31) மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு, கண்ணகையம்மன் கோவில் வீதியை அண்டியுள்ள வாவியருகே அடையாளம் காணப்படாத ஆணொருவரின் சடலம் கிடப்பதாக பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர்.
இவர் சுமார் 60 வயதைக் கடந்திருக்கக் கூடியவர் என்று ஊகிக்கப்படுவதாகத் தெரிவித்த பொலிஸார், சடலத்தை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சடலத்தைப் பற்றிய மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
16 minute ago
22 minute ago
23 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
22 minute ago
23 minute ago
28 minute ago