Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 12 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஜனாதிபதியின் நாளைய மட்டக்களப்பு விஜயமும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை வெள்ளிக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புற்றுநோய் பிரிவுக் கட்ட்டம் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிர்வாக கட்டடம் மற்றும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றக் கட்டடத் தொகுதி என்பவற்றை திறந்து வைக்கவிருந்தார்.
எனினும், திட்டமிட்ட படி மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புற்று நோய் பிரிவுக் கட்டடம் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிர்வாக கட்டடம் திறந்து வைக்கப்படும் எனவும் இதில், சுகாதார அமைச்சர் ராஜிதசேனாரத்ன, மற்றும் அதன் பிரதியைமச்சர் பைஷால் காசீம் உட்பட அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
36 minute ago
59 minute ago
2 hours ago