Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள 2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான மூன்றாண்டு மீள்குடியேற்ற அபிவிருத்தித்திட்ட அறிக்கையை மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் எஸ்.சிவஞானசோதியிடம் மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் கையளித்துள்ளார்.
கொழும்பிலுள்ள அமைச்சில் வைத்து செவ்வாய்க்கிழமை (04) இந்த அறிக்கையை கையளித்துள்ளதாக மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்தார்.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் வழிகாட்டலில் 50530.79 மில்லியன் ரூபாய்க்கான திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 2017ஆம் ஆண்டுக்கு 15036.92 மில்லியன் ரூபாயும் 2018ஆம் ஆண்டுக்கு 17567.10 மில்லியன் ரூபாயும் 2018ஆம் ஆண்டுக்கு 17926.77 மில்லியன் ரூபாயும் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மீள்குடியேற்றப் பிரதேசங்களில் அபிவிருத்தித் திட்டங்கள் இல்லாமை காரணமாக மீள்குடியேற்ற வேலைக்காக நிதியைக் கோருவதில் பல்வேறு பிரச்சினைகள் இதுவரை காலமும் காணப்பட்டுவந்தன
இத்திட்டத்தின் கீழ் வீடமைப்பு, பொதுச் சுகாதாரம், குடிநீர் வழங்கல், வாழ்வாதாரத்திட்டம்;, கிராமிய வீதி அபிவிருத்தி, யுத்தம் காரணமாக பொதுமக்கள் இடம்பெயர்ந்த காலத்துக்கும் மீள்குடியேற்றப்பட்ட காலத்துக்கும் இடையில் உருவாகிய புதிய குடும்பங்களின் வேலைத்திட்டம், சுகாதார மற்றும் வைத்திய வசதி, சமூக அபிவிருத்தி உட்கட்டமைப்பு உள்ளிட்ட விடயங்கள் இந்த மீள்குடியேற்ற அபிவிருத்தித் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அவ்வாறே, வாழ்வாதார மேம்பாட்டுத்திட்டம், அதிக வருமானத்தைப் பெற்றுத்தரும் திட்டம், குடிநீர் பற்றாக்குறை காணப்படும் பிரதேசங்களுக்கு குடிநீர் விநியோகத்தை விஸ்தரித்தல், புதிய சாத்தியமான கிராமிய குடிநீர் வழங்கல் திட்டத்தை அமுல்படுத்துதல் ஆகியனவும் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும், கடந்த காலத்தில் இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் தங்கியிருந்தவர்கள், வன்னியிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்துக்குத் திரும்பியவர்கள், முன்னாள் போராளிகள், இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருந்து நாடு திரும்பியவர்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கான செயற்றிட்டங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025