Princiya Dixci / 2016 ஜூன் 09 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் 41 பாடசாலைகளுக்கான அதிபர் பதவிகளுக்கு வெற்றிடம் காணப்படுவதாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சேகு அலி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் 17 பாடசாலைகளுக்கும் கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) கல்விக் கோட்டத்தில் 15 பாடசாலைகளுக்கும், ஏறாவூர் கல்விக் கோட்டத்தில் 09 பாடசாலைகளுக்கும் அதிபர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
இதில் அண்மையில் நடைபெற்ற அதிபர் பரீட்சையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் 26 பேர் சித்தியடைந்துள்ளனர்.
இவர்களில் காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் 4 அதிபர்களும் கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) கல்விக் கோட்டத்தில் 17 அதிபர்களும், ஏறாவூர் கல்விக் கோட்டத்தில் 5 அதிபர்களும் பரீட்சையில் சித்தியடைந்து தற்போது பயிற்சி செயலமர்வில் கலந்துகொண்டுள்ளனர்.
இவர்கள் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் அதிபர் வெற்றிடமாகவுள்ள 41 பாடசாலைகளில் 26 பாடசாலைகளுக்கு புதிய அதிபர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
இப்புதிய அதிபர்கள் நியமிக்கப்படுவார்களாயின் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள 15 பாடசாலைகளுக்கான அதிபர் பதவிகளுக்கு வெற்றிடங்கள் காணப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
அதிபர் வெற்றிடமாகவுள்ள பாடசாலைகளில் தற்போது ஆசியர் தரத்திலுள்ளவர்களே அதிபர்களாகவுள்ளனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
7 minute ago
23 minute ago
26 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
23 minute ago
26 minute ago
46 minute ago