Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜனவரி 31 , மு.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 190 பேர் சமாதான நீதவான்களாக கடமையாற்றுகின்றனர். இவர்களில் 13 பெண்களும் அடங்குவதாக சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஸ்தாபகத் தலைவர் எம்.எம்.சாந்தி முஹைதீன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலொன்றின்போதே, அவர் இதனைக் கூறினார்.
சமாதான நீதவான் பதவியைப் பெற பெண்கள் முன்வரவேண்டும். அப்போதே, குடும்பங்களிலும் சமூக மட்டத்திலும் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இலகு எனவும் அவர் கூறினார்.
மத்தியஸ்த சபைகளுக்கு வருகின்ற அதிகளவான பிரச்சினைகள் குடும்பப் பிணக்குகளுடன் சம்பந்தப்பட்டவையாக உள்ளன. குடும்பப் பிணக்குகள் என்று வரும்போது, அதில் பெண்களும் சம்பந்தப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களாகவோ அன்றில் பாதிப்பை ஏற்படுத்தியவர்களாகவோ இவற்றில் எதில் சம்பந்தப்பட்டவராக பெண்கள் இருந்தாலும், அவர்கள் தங்களின் நியாயங்களை மனம் விட்டுக் கூறுவதற்கும் ஆண்களிடம் கூறமுடியாத சங்கடமான விடயங்களை மன ஆற்றுப்படுத்தலுக்காகவும் நீதி வேண்டியும் வெளியில் கூறுவதற்கும் பெண் பிரதிநிதித்துவம் சமாதான நீதிவான்களாகவும் மத்தியஸ்த சபை உறுப்பினர்களாகவும் இருக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago