Suganthini Ratnam / 2016 மார்ச் 16 , மு.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு சித்தாண்டி சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் காணப்படும் நிர்வாகக் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கோரி அவ்வித்தியாலய நுழைவாயிலை மூடி மாணவர்களும் பெற்றோரும் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வித்தியாலய அதிபர் கடந்த மூன்று மாதங்களாக சுகவீன விடுமுறையில் இருப்பதாகவும் இதனால், அவருக்குப் பதிலாக புதிய அதிபர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
சுமார் 300 மாணவர்கள் கல்வி கற்கின்ற இவ்வித்தியாலயத்தில் நீண்டகாலத்துக்குப் பின்னர் கடந்த வருடம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் ஒரு மாணவி சித்தி அடைந்துள்ளார். இந்நிலை வீழ்ச்சியடையாமல் இருக்கவும் மாணவர் தொகையை அதிகரிப்பதற்கும்; நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகை தந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா, கோட்டக் கல்விப் பணிப்பாளர் பொ.சிவகுரு ஆகியோரிடம் பெற்றோர் தெரிவித்தனர்.
இதன்போது கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா தெரிவிக்கையில், 'சித்தாண்டி சித்தி விநாயகர் வித்தியாலய அதிபர் சுகவீனம் காரணமாக விடுமுறையில் உள்ளார். அவருக்குப் பதிலாக புதிய அதிபரை நியமிக்குமாறு ஒருவரின் பெயர் பெற்றோர்களால் முன்மொழியப்பட்டது. ஆனால், குறித்த நபர் இவ்வித்தியாலயத்துக்கு நியமிக்கப்படக்கூடிய அதிபர் தரத்தில் இல்லை. அதிபர்கள் வெற்றிடம் தொடர்பாக நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களுக்குள் இவ்வித்தியாலயத்துக்கு புதிய அதிபர் நியமிக்கப்படுவார்' என்றார்.


4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago