Suganthini Ratnam / 2016 மே 02 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் இன்று திங்கட்கிழமை 20ஆவது தொகுதி புதிய ஆசிரியர் பயிலுனர்கள் வரவேற்கப்பட்டனர்.
இவர்களை வரவேற்கும் நிகழ்வு மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரிப் பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
2016ஆம் தொடக்கம் 2018ஆம் கல்வி ஆண்டுக்காக இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் 230 ஆசிரியர் பயிலுனர்கள் மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் பயிலுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இன்றையதினம் 130 புதிய ஆசிரியர் பயிலுனர்;கள் தமது வருகையை உறுதிப்படுத்தியுள்ளனர்.
விஞ்ஞானம், தொழில்நுட்பம், சித்திரம், வரலாறு, உடற்கல்வி போன்ற பாடங்களுக்கே இப்புதிய ஆசிரிய பயிலுனர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் நிர்வாகத்துக்கான உப பீடாதிபதி எஸ்.ஜெயக்குமார் தெரிவித்தார்.


3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago