Suganthini Ratnam / 2016 மே 11 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
அரசாங்க மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இணைச் செயற்பாடுகள், கொள்கைகளுக்கு ஏதுவாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்ட அலுவலகம், மட்டக்களப்பு மாவட்டச் செயலக வளாகத்தில் இன்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
1998ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த காலத்தில் வாழ்வாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள், நல்லாட்சி தொடர்பான செயற்றிட்டங்கள், கொள்கை மாற்றங்கள், அனர்த்த முகாமைத்துவச் செயற்றிட்டங்கள் உள்ளிட்ட செயற்றிட்டங்கள் இந்தத் திட்டத்தால் முன்னெடுக்கப்பட்டன.
தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மட்டக்களப்பு மாவட்ட ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டத்திலும் நல்லாட்சி மேம்பாடு, உள்ளூர் பொருளாதார அபிவிருத்தி சார் திட்டங்கள் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இனிமேல் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் செயற்பாடுகள், சேவைகளை மேற்படி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.


3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago