2025 மே 01, வியாழக்கிழமை

மணல் அகழ்வுக்கு எதிராகப் பேரணி

Editorial   / 2020 செப்டெம்பர் 29 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

மாதுறுஓயா கிளை ஆற்றில் முன்னெடுக்கப்படும் மணல் அகழ்வைத் தடுக்கக் கோரி, மட்டக்களப்பு - கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புணாணை மேற்கு விவசாயிகளால் இன்று (29) கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது.

புணாணை, கிடச்சிமடு விவசாய அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கவனயீர்ப்புப் பேரணி, கிடச்சிமடு விவசாய கண்டத்தில் இருந்து ஆரம்பமாகி, ரிதிதென்னை சந்திவரை சென்றடைந்தது.

இதன்போது, “மணல் அகழ்வின் மூலம் விவசாயத்தை அழிக்காதே”, “தேசிய உற்பத்திக்கு பங்களிப்புச் செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்காதீர்” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

புணாணை மேற்கில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதால் 15,000க்கும் மேற்பட்ட நெற்காணிகளும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளும் பாதிக்கப்படுவதாக, பேரணியை முன்னெடுத்த விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கும் மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மண் அகழ்வு விடயத்தில் உரிய அதிகாரிகள் கரிசனை காட்ட வேண்டுமெனவும் விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .