2025 மே 23, வெள்ளிக்கிழமை

மணல் அகழ்வு; இருவர் கைது

Yuganthini   / 2017 செப்டெம்பர் 11 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கை இடம்பெற்று வரும் நிலையில், அதனைத் தடுக்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவரவின் பணிப்புரைக்கமைய பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதனடிப்படையில், மட்டக்களப்பு பிராந்திய ஊழல் மோசடி தடுப்பு பிரிவுப் பொறுப்பதிகாரி டப்ளியு. ரணதுங்க தலைமையிலான குழுவினர், இன்றுக் காலை கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொண்டுகள்சேனை ஆற்றில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிக்கொண்டிருந்த இரண்டு உழவு இயந்திரங்களைக் கைப்பற்றினர்.

அத்துடன், சந்தேகநபர்கள் இருவரையும் கைதுசெய்து, வாழைச்சேனை பொலிஸில் ஒப்படைத்தனர்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பொண்டுகள்சேனை, வாகனேரி, ஆத்துச்சேனை போன்ற பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றுவதாக, மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவரவுக்கு கிடைத்த தகவலையடுத்து சட்டவிரோத மண் அகழ்வை தடுக்கும் முகமாக விசேடமாக நியமிக்கப்பட்ட குழுவினரால் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டு வருபவர்கள் கைதுசெய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X