2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

மணல் கடத்தலில் ஒருவர் கைது

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2017 செப்டெம்பர் 20 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை, காத்தான்குடி பொலிஸார் இன்று (20) காலை கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெலிகொம் வீதியில், டிப்பர் வாகனத்தில் அனுமதிப் பத்திரமின்றி மணலை ஏற்றிவந்த சந்தேகநபர் ஒருவரையே இவ்வாறு கைது செய்ததாக, காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்திய டிப்பர் வாகனமும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X