2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மணல் கொள்ளையர்கள் கைது

Editorial   / 2017 ஜூலை 08 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில், நீண்ட காலமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டுவந்த கும்பலொன்றை, இரவுவேளையில் காட்டில் பதுங்கியிருந்த நிலையில்,     மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் குழுவினர், நேற்று (07) கைதுசெய்யதுள்ளனர்.

இதன்போது, மணல் ஏற்றப்பட்ட  இழுவைப்பெட்டிகளுடன் 12 உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, 12 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர்கள் கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மணல் ஏற்றிச்செல்வதற்கு மாத்திரம்  அனுமதிப்பத்திரத்தை வைத்துக்கொண்டு களுமுந்தன்வெளி ஆற்றினுள் சட்டவிரோதமாக  மணல் அகழ்ந்துகொண்டிருந்தமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், இரவு வேளையில் அற்றோர காட்டுப்பகுதியல் பதுங்கியிருந்த குழுவினரை கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .