2025 மே 10, சனிக்கிழமை

மணல் அகழ்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 13 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் மணல் அகழ்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலகத்தில்  இன்று புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு சிலர் மணல் அகழ்வதற்கான பல அனுமதிப்பத்திரங்களை வைத்துக்கொண்டு மணல் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக சாதாரண மக்கள் தொழிலின்றி பெரும் கஷ்டத்தை எதிர்நோக்கிருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கவேண்டுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணமும் இங்கு வேண்டுகோள் விடுத்தார்.

இது தொடர்பில் ஆராய்ந்த மாவட்ட அபிவிருத்திக்குழு  தீர்க்கமான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X