Niroshini / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
வறுமைக்கோட்டுக்குட்பட்ட மாணவர்களை கல்வியில் ஊக்குவிக்கும் விசேட திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தி வரும் கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை காலை மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேசிய கலந்துரையாடல் அமைச்சின் சிரேஸ்ட உதவி செயலாளர் ஏ.எல்.எம்.ஹாசீம்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா,மட்டக்களப்பு மாவட்ட செயலக தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் உதவியாளர் வி.சந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, சிறுவர்களின் ஆளுமையினை விருத்திசெய்யும் வகையிலும் அவர்களை அவர்களே பாதுகாக்கும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்வினை மாவட்ட சிறுவர் திணைக்கள இணைப்பாளர் வி.குகதாசன் நிகழ்த்தினார்.
இதேவேளை,வடக்கு மற்றும் வவுணதீவு பகுதிகளில் உள்ள வறுமைக்கோட்டின் கீழ் உள்ள நூறு மாணவர்களுக்கு பாடசாலை பைகள்,கற்றல் உபகரணங்கள்,பாதணிகள் என்பன வழங்கிவைக்கப்பட்டன.


15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025