எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயார் இல்லப் பிரதிநிதிகளுக்கும் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனப் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன மண்டபத்தில், இன்று (29) நடைபெற்றது.
மட்டக்களப்பு, சீயோன் தேவாலயத்தின் மீது ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதல் நடத்திய தற்கொலைதாரியின் உடல் பாகங்கள் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் முறுகல் நிலையையடுத்து, இது தொடர்பாகக் கலந்துரையாடும் நோக்கில், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் இல்லப் பிரதிநிதிகள், காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
மேற்படி கலந்துரையாடலின் போது, இன முறுகல்கள் ஏற்படாதவாறு, சமாதானத்தை நிலை நாட்டுவது தொடர்பிலும் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வீதியால் பயணித்த முஸ்லிம்களைத் தாக்க முற்பட்ட விவகாரம் தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன், இவ்விடயம் தொடர்பில் மட்டு. ஆயர் இல்லத்தில் நடைபெறவுள்ள சந்திப்பில் விரிவாக ஆராய்வது எனவும் கலந்துரையாடப்பட்டது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025