Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 பெப்ரவரி 05 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளரின் கணவர், சட்டவிரோதமாக சாராயம் வைத்திருந்த குற்றச்சாட்டில், நேற்று (04) மாலை கைது செய்யப்பட்டுள்ளாரென, ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
ஏறாவூர் நகர சபைக்காக, உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், ஏறாவூர், எல்லை நகர் வட்டாரத்தில் போட்டியிடும் பிரதான தேசியக் கட்சியொன்றின் வேட்பாளரான பெண்ணின் வீட்டில் வைத்து ஆதரவைத் திரட்டுவதற்காக சாராயம் பகிரப்படுவதாக, பொதுமக்களிடமிருந்து 119 இலக்க அவசர இரகசியப் பொலிஸ் தொலைபேசிக்கு தகவல் கூறப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், உரிய வீட்டைச் சோதனையிட்டபோது, அவ்வீட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராயங்கள் நிரம்பிய 9 போத்தல்களைத் தாம் கைப்பற்றியதாக, ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், சட்டவிரோதமான முறையில் சாராயத்தைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், பெண் வேட்பாளரின் கணவரான 74 வயது நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளில் ஏறாவூர்ப் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
24 minute ago
26 minute ago
52 minute ago