2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மதுபானப் போத்தல்களுடன் சென்றவருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2016 மே 24 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

25 மதுபானப் போத்தல்களைக் கொண்டுசென்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமாக களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதவான் எம்.றிஸ்வான் நேற்றுத் திங்கட்கிழமை விதித்தார்.  

வெசாக் தினத்தையிட்டு மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்களம் மேற்கொண்ட திடீர்ச் சோதனையின்போது, கடந்த சனிக்கிழமை இவர் 25 மதுபானப் போத்தல்களுடன் கைதுசெய்யப்பட்டார்.

வெசாக் தினத்தில் மதுபான நிலையங்கள் பூட்டப்பட்டு மதுபான விற்பனைகள் நிறுத்தப்பட்ட  நிலையில் சட்டவிரோத விற்பனைக்காக கொண்டுசெல்லப்பட்ட குறித்த மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபரும் கைதுசெய்யப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X