Freelancer / 2022 டிசெம்பர் 02 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும் சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்து நாட்டில் தமிழ் இலக்கியத் தளத்தில் இயங்கி வருபவருமான சண். தவராஜாவின் "மனுஷி" சிறுகதை நூல் வெளியீடும், அறிமுக நிகழ்வும் மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு மகுடம் கலை, இலக்கிய வட்டத்தின் பௌர்ணமி கலை, இலக்கிய நிகழ்வின் 47 ஆவது தொடராக எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதி காலை 10 மணிக்கு (முழுமதி தினம்) இந்த நூல் வெளியீடும், அறிமுக நிகழ்வும் பிரபல இலக்கியவாதியும், படைப்பாளியுமான பேராசிரியர் செ. யோகராசா தலைமையில் மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
புலம் பெயர் மற்றும் வெளி மாவட்டங்களில் உள்ளவர்களும் Zoom தொழிநுட்பம் வாயிலாக Zoom ID. 8997230363 மூலம் நிகழ்வில் இணையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
30 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
45 minute ago