Niroshini / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேனையில், இராணுவ முகாம் பாவனையிலிருந்து விடுவிக்கப்பட்ட காணியிலிருந்து மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் சில தடயங்கள், நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
இதையடுத்து, அங்கு இடம்பெற்றுவந்த அகழ்வுப் பணிகள் பொலிஸாரின் உத்தரவின் பேரில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
1990ஆம் ஆண்டு முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஷ்ண மிஷன் பாடசாலை கட்டடத்தையும் அதன் அருகாமையிலுள்ள வீடுகளையும் காணிகளையும் உள்ளடக்கியதாக இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.
தனியாருக்குச் சொந்தமான காணிகளின் ஒரு பகுதி போருக்குப் பின்னர் 2014ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டு ஒரு பகுதி உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டதுடன், மேலும் 45 வீடுகள் இராணுவத்தினரின் பாவனையிலுள்ளன. கையளிக்கப்பட்ட காணிகளில் தற்போது புனர்வாழ்வு, புனரமைப்பு மீள்குடியேற்ற அமைச்சின் உதவியுடன் வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், காணியொன்றின் உரிமையாளர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை, மலசலகூடம் அமைப்பதற்கான குழி வெட்டிய போது மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் தடயங்கள் காணப்பட்டன.
இதையடுத்து, ஏறாவூர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும் பொலிஸார் வந்து பார்வையிட்டதுடன் வேலைகளை இடைநிறுத்துமாறு உத்தரவிட்டனர்.
மேலும், நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தினை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனை நேரில் சென்று பார்வையிட்டார்.
அங்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த அசாதாரண சூழலின்போது பலர் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். அவர்களில் பலர் கொலைசெய்யப்பட்டு இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
“இந்த இராணுவ முகாம் விரைவாக விடுவிக்கப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட வேண்டும். அது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சிடம் கலந்துரையாடியுள்ளேன். இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதிகளில் மனித எச்சங்கள் இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன. அவை ஆராயப்பட வேண்டும்.
இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியில் 45 குடும்பங்களின் வீடுகள் உள்ளன. அவர்கள் விரைவாக சொந்த வீடுகளில் குடியேற வேண்டும். அவர்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினுடாக உதவிகளைப் பெற்றுக்கொடுக்க தாயாராக உள்ளேன்” என்றார்.

10 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago