2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மரக்கறி விதைகள் விநியோகம்

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 22 , பி.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

உணவுப் பஞ்சத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில், உப உணவுப் பயிர் உற்பத்தியைப் பெருக்குவதற்காக, வீட்டுத் தோட்ட விவசாயிகளுக்கு குறிப்பாகப் பெண்களுக்கு மரக்கறிப் பயிர் நாற்றுக்களும் பழ மரக்கன்றுகளும் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக ஏறாவூர் நகர விவசாய விரிவாக்கல் பிரிவின் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர பிரதேசத்திலுள்ள கலையாற்றல் மிக்க பல்துறைக் கலைஞர்களுக்கு கத்தரி மற்றும் மிளகாய் நாற்றுக்களை வழங்கும் நிகழ்வு, ஏறாவூர் நகரில் இன்று (22) இடம்பெற்றது.

அங்கு நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய விவசாயப் போதனாசிரியை முர்ஷிதா ஷிரீன், “போதியளவு நிலப்பரப்புக் குறைவாக இருக்கின்ற இடங்களிலும் கூட பயிர்களை நாட்டி நாளாந்த வீட்டுக்குத் தேவையான மரக்கறிகளை இலைக்கறிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

“இதன்மூலம் நமக்குத் தேவையான போஷணையையும் பெற்றுக் கொண்டு, நோய் நொடியற்று ஆரோக்கியமாக வாழ முடியும். பயிர்களுக்குத் தேவையான இயற்கைப் பசளைகளையும் நாமே வீட்டில் நாளாந்தம் சேரும் கழிவுகளைக் கொண்டு தயாரித்துக் கொள்ள முடியும்.

“எனவே, இத்தகைய முன்மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு பெண்களும் உணவு உற்பத்திக்காக நமக்குத் தேவையான உணவுப் பொருட்களை நாமே உற்பத்தி செய்து தன்னிறைவு அடைய வேண்டும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X