2025 மே 07, புதன்கிழமை

மருத்துவ பீட மாணவர்களுக்கு ஞாபகார்த்த புலமைப்பரிசில்

Niroshini   / 2015 நவம்பர் 04 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட 4 மாணவர்களுக்கான ஞாபகார்த்த புலமைப்பரிசில் பணம் வழங்குவதற்கான வைப்புச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை புதிய கல்முனை வீதியில் அமைந்துள்ள வைத்திய பீடத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கோட்டைமுனையைச் சேர்ந்த நாகமணி புரணம்மா ஆச்சாரி மற்றும் சண்முகம் பாக்கியலட்சுமி ஆச்சாரி ஞாபகார்த்தமாக ரூபாய் 2 மில்லியனை மட்டக்களப்பு மக்கள் வங்கியில் வைப்பீடு செய்து அதற்கான சான்றிதழை குறித்த குடும்பத்தைச் சேர்ந்த எஸ். சந்திரா, கிழக்கு பல்கலைக்கழக சுகாதார பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரும் பீடாதிபதியுமான கே.ரி.சுந்தரேசனிடம் கையளித்தார்.

வைத்தியபீடத்தின் கபினட்சபையின் ஆலோசனைக்கிணங்க 5 ஆண்டுகள் கொண்ட கல்வியாண்டில் முதல் 2 வருடத்துக்கு 2 பேருக்கும் அடுத்த 2 வருடத்தில் ஒருவருக்கும் இறுதியாண்டில் ஒருவருக்குமாக 4 பேருக்கு தலா ரூபாய் 2,500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக பீடாதிபதி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X