Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
வைத்தியர்களால் சிபாரிசு செய்யப்படும் மருந்துகள் மாத்திரமே மருந்தகங்களில் நோயாளர்களுக்கு விற்பனை செய்யப்பட வேண்டுமென்று காத்தான்குடி நகரசபைப் பிரிவிலுள்ள சகல மருந்தகங்களுக்கும் காத்தான்குடி சுகாதார அலுவலகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர்; யு.எல்.நசிர்தீன் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிவித்தலில், 'வைத்தியர்களால் சிபாரிசு செய்யப்படும் மருந்துகளே விற்பனை செய்யப்பட வேண்டுமென்பதுடன், மேலும், பதிலீட்டு மருந்துகள் விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், காலாவதியான மருந்துகள் விற்பனை செய்யக்கூடாதென்பதுடன், காலாவதியான மருந்துகள் மருந்தகங்களிலும் காணப்படக்கூடாது. அத்துடன், மருந்தகங்களில் வைத்திய சிபாரிசு பதிவேடு பேணப்பட வேண்டும். அபாயகரமான மருந்துகளின் விற்பனைப் பதிவேடும் பேணப்பட வேண்டும். அவ்வவ் மருந்துகளுக்கேற்ப உரிய வெப்பநிலை பேணப்பட வேண்டும்.
நோய்களை, நோய் அறிகுறிகளை வினாவி, அதற்குரிய மருந்துகளைக் காண்பித்து தன்னிச்சையாக மருந்துகளை விற்பனை செய்யவேண்டாம். மருந்தகங்களில் பதிவுசெய்யப்பட்ட தகுதிவாய்ந்த மருந்தாளர்கள் இருக்கவேண்டுமென்பதுடன், அவர்கள் மேற்பார்வை செய்யவேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago