எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2019 பெப்ரவரி 11 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
தான் கலந்துகொள்ளும் சகல விதமான உத்தியோகபூர்வ வைபவங்களில், தனக்கு மலர்மாலை அணிவிக்கவோ, பொன்னாடை போர்த்தவோ வேண்டாமென, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வினயமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பில், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ்.எம்.டி.அசங்க அபேவர்த்தன, கிழக்கு மாகாணத்திலுள்ள சகல திணைக்களங்களின் தலைவர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்வுகளை ஒழுங்குப் படுத்தும் போது, இந்த அறிவுறுத்தலுக்கு அமைய நடவடிக்கை எடுக்குமாறும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சனிக்கிமை இடம்பெற்ற காத்தான்குடி மத்திய கல்லூரியின் 89ஆவது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு உரையாற்றிய, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், “13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவாக, கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும்” என்றார்
அத்துடன், கல்வி, சுகாதாரத் துறைகளில் கிழக்கு மாகாணத்தை முன்னேற்றுவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தனக்குப் பணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவை தொடர்பாக பல தீர்மானங்களைத் தான் எடுத்துள்ளதாகத் தெரிவித்த அவர், அந்தவகையில், ஒவ்வொரு பாடசாலை அதிபர்களுக்கும் பிரதேச கல்விப் பணிப்பாளர்களுக்கும் அதிகாரங்களை வழங்கி, ஒவ்வொரு பிரதேசத்தினுடைய கல்வித் திட்டங்களை அவர்களுக்கு ஒப்படைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், கிழக்கு மாகாணத்தினுடைய ஒவ்வொரு பிரச்சினையையும் அடையாளங்கண்டு, அந்தப் பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பதிலும் முழுமையா கவனத்தைத் தாம் செலுத்துகின்றோம் என்றார்.
3 minute ago
20 minute ago
26 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
20 minute ago
26 minute ago
1 hours ago