2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மழை வேண்டி தொழுகை

Princiya Dixci   / 2017 ஜனவரி 08 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி நீங்கி, மழை பொழிய வேண்டும் என பாலாவி நாகவில்லு எருக்கலம்பிட்டி பிரதேசத்தில் விசேட தொழுகையும் துஆப் பிரார்த்தனையும், பாலாவி எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலய மைதானத்தில் இன்றுக் காலை  நடைபெற்றது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியினால் பயிர் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குளங்கள், கிணறுகள் என்பனவும் நீர் இன்றி வறண்டுள்ளன.

எனவே, நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி நீங்கி மழை பொழிய வேண்டும் என அனைவரும் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் ஆலோசனையின் பேரில் பாலாவி நாகவில்லு எருக்கலம்பிட்டி ஜூம்ஆ மஸ்ஜித் நம்பிக்கையாளர் சபையினரின் ஏற்பாட்டில், எருக்கலம்பிட்டி ஜூம்ஆப்பளிவாசல் பிரதம இமாம் அஷ்ஷெய்க் என்.அஸ்மீர் (உஸ்வி) நெறிப்படுத்தலில் குறித்த தொழுகை நடைபெற்றது.

இதன்போது, புத்தளம் மன்பாஉஸ் ஸாலிஹாத் பெண்கள் அரபுக்கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் ஏ.எம்.எம்.ரியாஸ் ஹாரி தேவ்பந்தி  மழை வேண்டி தொழுகை, துஆப் பிரார்த்தனை மற்றும் குத்பா பிரசங்கம் என்பவற்றை நடத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X