Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
எம்.எம்.அஹமட் அனாம் / 2020 மார்ச் 02 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் நாம் நிம்மதியாக வாழ்ந்தது போன்று இனிவரும் காலமும் நிம்மதியாக வாழ சிந்தித்து செயற்பட வேண்டுமென, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பினால் கல்குடா பிரதேசத்துக்கான பொதுத் தேர்தல் தொடர்பான கட்சிப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல், வாழைச்சேனையிலுள்ள கட்சி காரியாலயத்தில் நேற்று (01) இரவு நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துரைக்கையில், “முன்னைய மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் முஸ்லிம் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள். பல அபிவிருத்திகளைக் கண்டார்கள். ஆனால், தற்போது மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற தேர்தலில் முஸ்லிம்கள் வாக்களிக்காதமை பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாக ஜனாதிபதியும் பிரதமரும் சிந்திக்கின்றனர். எனவே, இனிவரும் காலத்தில் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.
“கடந்த காலத்தில் அரசாங்கத்தின் மூலம் அபிவிருத்திகளை அமீர் அலி, ஹிஸ்புல்லா, அதாவுல்லாஹ் யாராக இருந்தாலும் மஹிந்த கால அரசாங்கத்தின் மூலமே பாரிய அபிவிருத்திகளைச் செய்திருப்பார்கள்.
“தங்களுக்கு அபிவிருத்திகள் செய்யக் கூடிய நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டுமா அல்லது ஊருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டுமா என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டிய தேவை உள்ளது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
26 minute ago
44 minute ago
1 hours ago