2025 மே 23, வெள்ளிக்கிழமை

மாணவர்களின் வேண்கோளுக்கிணங்க ஆரம்பப் பாடசாலை தரமுயர்கின்றது

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 செப்டெம்பர் 04 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள மாவடிச்சேனை அல்-இக்பால் வித்தியாலயம், ஆரம்பப் பாடசாலை என்ற தரத்திலிருந்து, இடைநிலைப் பாடசாலை என்ற தரத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஐந்தாம் தரம் வரை உள்ள இப்பாடசாலையை, 6ஆம் வகுப்பு வரை மாணவர்களை அனுமதிக்கும் இடைநிலைப் பாடசாலையாகத் தரம் உயர்த்துமாறு, முதலமைச்சரிடம் அங்கு கற்கும் மாணவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்த விடயம் தொடர்பாக உடனடியாக மாகாண கல்வியமைச்சின் செயலாளர், மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளரின் கவனத்துக்குக் கொண்டு வந்ததன் அடிப்படையில் தரம் உயர்த்தப்பட்டதாக, முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்த வேண்டுகோளுக்கும் மேலதிகமாக  இப்பாடசாலை புதிய வகுப்பறைக் கட்டடத்துக்கு 6 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இப்பாடசாலைக்கு போட்டோக் கொப்பி இயந்திரமும் முதலமைச்சரால் நேற்று (03) வழங்கிவைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X