Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஜூலை 30 , பி.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூர் பொலிஸ் பிரிவு, ஆறுமுகத்தான்குடியிருப்புக் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து, பாடசாலை மாணவியொருவரின் சடலத்தை, நேற்று (29) இரவு மீட்டு, உடற்கூறாய்வுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
நாவற்கேணி – மயில்வாகனம் வீதியை அண்டி வசிக்கும் செல்வேந்திரன் நிரோனிகா எனும் 10ஆம் தரத்தில் கற்கும் 16 வயது மாணவியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பை அண்டியுள்ள சிறுமிகள் விடுதியொன்றில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்த இந்தச் சிறுமி, பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, விடுதியை விட்டு வெளியேறியுள்ளார்.
பின்னர் வேறொரு கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார் என்று, இச்சம்பவம் குறித்து உறவினர்கள் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .