Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜூன் 24 , பி.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிறப்பில், யுத்தம், இயற்கை அனர்த்தங்களால் அவயவங்களை இழந்தவர்களுக்கு இலவசமாக அவயவங்களை வழங்கும் விசேட திட்டம், ஜேர்மன் நாட்டு உதவியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் வேண்டுகோளில், கிழக்கு மாகாண சமூக சேவைத் திணைக்களத்தின் சிபாரிசில், இவ்வாறானவர்களுக்கு இலவசமாக செயற்கை அவயங்கள் வழங்கும் நிகழ்வு, செயலக சமூக சேவை அலுவலகத்தில் இன்று (24) நடைபெற்றது.
இதன்போது, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவலிலுள்ள மாற்றுத்திறனாளிகளில், 18 பேருக்கு செயற்கை அவயவங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் முழங்கை, கால் கீழ்ப்பகுதி, மேல் பகுதிகளை இழந்தவர்களுக்கும் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட சிறு பிள்ளைகளுக்கான பாதணிகள் வழங்ளும் வைக்கப்பட்டன.
இந்த அவயவங்களை குன்டசாலை ஹெண்டிகெப் நிலையம் தயாரித்து வழங்கியுள்ளது. ஜேர்மன் நாட்டின் கிறிஸ்ரப்ஸ் பிளைன் மிசன் (சீ.பீ.எம்.) நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது.
கோறளைப்பற்று மத்தி சமூக சேவை உத்தியோகத்தர் அசனார் நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், உதவி பிரதேச செயலாளர் செயலாளர் எம்.ஏ.சீ.றமீஸா. நவஜீவன கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
01 May 2025
01 May 2025