Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓமடியாமடு கிராமத்தில், மினிசூறாவளியால் பாதிக்கப்பட்ட 71 குடும்பங்களுக்கு, தமது வீடுகளைத் திருத்தியமைப்பதற்கான கொடுப்பனவுகளும் உலருணவு நிவாரணமும், நேற்று (08) வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், பிரதேச செயலாளர் எஸ். ஹரன், பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை வழங்கிவைத்தார்.
இவ்வாண்டு ஜூலை மாதம், ஓமடியாமடுப் பகுதியில் திடீரென வீசிய மினிசூறாவளியால், அங்குள்ள விவசாயக் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன.
அந்த வகையில், சேத மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவுகளில், மொத்தம் நான்கு இலட்சத்து 35 ஆயிரத்து 600 ரூபாய் பணம், இழப்புக்கேற்ற மதிப்பீட்டின் அடிப்படையில் முதற்கட்டமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்ட 71 குடும்பங்களுக்குமாக, மொத்தம் ஒரு இலட்சத்து 96 ஆயிரத்து 200 ரூபாய் பெறுமதியான இரண்டாங்கட்ட உலருணவு நிவாரண விநியோகமும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், பிரதேச அனர்த்த நிவாரண சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே. புவிதரன், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ. நஜீம், சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்களான என். கணலோஜினி, ஜே.ஆர். புலேந்திரராசா, கிராம சேவை அலுவலர் எஸ். தெய்வேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
7 hours ago