2025 மே 17, சனிக்கிழமை

மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கு ஆய்வு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜூன் 28 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் சக்தி சேமிப்பு சாத்தியக் கூறுகளின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதாக, இலங்கை மின்சார சபையின் கிழக்கு மாகாண பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் எம்.எஸ்.டபிள்யூ வீரசிங்ஹ தெரிவித்தார்.

இக்கணக்கெடுப்பு, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மின் சக்தி பாவனைக்குட்படுத்தப்படும் வீடுகள், வர்த்தக நிலையங்கள், விடுதிகள், சிறிய தொழிற்துறைகள் சார்ந்த இடங்களில் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் வாடிக்கையாளர், ஒருங்கிணைப்பாளர்களால் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கென மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 900 மின் பாவனை இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதெனவும், 20 கள ஆய்வாளர்கள் கணக்கெடுப்பை மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மின் சக்திச் சேமிப்புத் தொழில்நுட்பங்கள், வழிமுறைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நேரடியான நன்மைகளைப் பெற்றுத் தருவதுடன், மாதாந்த மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதே, இந்த ஆய்வுக் கணக்கெடுப்புத் திட்டத்தின் நோக்கமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .