2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மின்சாரப் பொருட்கள் சேதம்

எம்.எம்.அஹமட் அனாம்   / 2017 ஓகஸ்ட் 24 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிண்ணையடி பகுதியில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட மின்னல் தாக்கத்தால் அப்பகுதியிலுள்ள வீடுகளில் மின் உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாக, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணையடி விஷ்ணு கோவில் வீதியிலுள்ள ஆறுமுகம் பாக்கியராசா என்பவரின் காணியிலுள்ள தென்னை மரத்தில் மின்னல் விழுந்து, மரம் எரிந்துள்ளதுடன், அவரது வீடு மற்றும் அயலிலுள்ள 5 வீடுகளில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டி, வானொலி, டெக், மின்விசிறி, மின்குமிழ் போன்ற மின்சார உபகரணங்கள் சேதமடைந்துள்ளன.

இச்சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் எவருக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .