2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மின்சார, நீர், தொலைபேசிக் கட்டணங்களை மானியமாக வழங்குமாறு வேண்டுகோள்

Editorial   / 2020 மார்ச் 24 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

நாட்டில் நிலவும் அசாதாரண நிலையைக்  கருத்திற் கொண்டு, மின்சாரம் தண்ணீர் , தொலைபேசி கட்டணங்களை இம்மாதம் மானியத்தில் வழங்குமாறும் இல்லாவிடின் அவற்றின் அரைவாசி கட்டணத்தை மாத்திரம் செலுத்த அனுமதிக்க வேண்டுமென, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 

காரைதீவு பிரதேசசபையில் நேற்று (23) நடைபெற்ற  விசேட கொரோனா அமர்வில் உரையாற்றிய தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
குழந்தைகள், மாணவர் தொடக்கம் வயோதிபர் வரை வீட்டிலிருக்கும் தருணம் ஸ்மாட்போன் பாவிக்கிறார்கள். அதற்கான டேட்டா வசதியை இந்த வாரத்திற்காவது இலவசமாக வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முன்வரவேண்டும்.
அரசாங்கத்தால் விலைக் குறைப்புச்செய்யப்பட்ட  உணவுப்பொருள்களை மக்கள் பெறும்வண்ணம் ஏற்பாடுசெய்யப்படவேண்டும்.

அதேப்போல் இன்னும்  ரின்மீன், பருப்பு என்பன மக்களுக்கு புதிய விலையில் கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.

 


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X