Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 23 , பி.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவிலுள்ள இருதயபுரம் பகுதியில் மின்சார அளவீடான மீற்றரில் மோசடி செய்து மின்சாரத்தை பெற்று பாவித்து வந்த இரு வீட்டின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கொழும்பில் இருந்து வந்த மின்சாரசபை அதிகாரிகளினால் நேற்று வெள்ளிக்கிழமை (22) மாலை கைது செய்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக மட்டக்களப்பு பொலி
ர் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் இரு வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த மின்சார மீற்றரில் சட்டவிரோதமாக மோசடி செய்து மின்சாரத்தை பெற்றுவந்துள்ளமை மின்சார சபையினரால் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கொழும்பில் இருந்து சம்பவதினமாhன நேற்று வருகைகதந்த உத்தியோகத்தர்கள் பொலிசாருடன் குறித்த இரு வீட்டை முற்றுகையிட்டனர்.
இதில் மின்சார மீற்றரை சோதனையிட்டபோது அதில் இருந்து திருட்டுத்தனமாக மின்சாரத்தை பெற்றுள்ளதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த இரு வீட்டின் உரிமையாளர்கள் இருவரை கைது செய்து ஒப்படைத்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago