Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Editorial / 2018 ஜூன் 18 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ. ஹுஸைன், க. விஜயரெத்தினம், வடிவேல் சக்திவேல்
மட்டக்ளப்பு, களுவாஞ்சிகுடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பாலத்துக்கு அருகாமையிலுள்ள ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, மின்னல் தாக்கம் காரணமாக ஆற்றில் காணாமல்போன மீனவரின் சடலம், இன்று (18) காலை மீட்கப்பட்டது.
கோட்டைக்கல்லாறு 2 கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 40 வயதையுடைய கந்தசாமி இராஜேந்திரம் எனும் மீனவரே, நேற்று (17) மாலை ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, மின்னல் தாக்கத்துக்குள்ளாகிய நிலையில், ஆற்றில் காணாமல்போயிருந்தார்.
இவரைத் தேடும் பணியில் பிரதேச மீனவர்களும் பொலிஸாரும் ஈடுபட்டிருந்த நிலையில், கோட்டைக்கல்லாறு வாவி பகுதியில் இருந்து நேற்றுக் காலை சடலமாக மீட்கப்பட்டார்.
சடலத்தை, திடீர் மரண விசாரணை அதிகாரி ச.கணேசதாஸ் பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பிவைத்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, களுவாஞ்சிகுடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago