2025 மே 01, வியாழக்கிழமை

மிளகாய் செய்கையின் அறுவடை விழா

Mayu   / 2023 டிசெம்பர் 12 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

விவசாய திணைக்களத்தினால்  வழங்கப்பட்ட கலப்பின செத்தல் மிளகாய் செய்கையின் அறுவடை விழா பழுகாமம் விவசாய போதனாசிரியர் பிரிவுகளுக்குட்பட்ட மட்டக்களப்பு பொறுகாமம் கிராமத்தில் இடம்பெற்றது.

பழுகாமம் விவசாய போதனாசிரியர் பிரிவுக்கு பொறுப்பான விவசாய போதனாசிரியர் துஷ்யந்தி ஜதீஸன்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் வீ.பேரின்பராஜா,  தெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் எஸ். சித்திரவேல், விவசாய போதனாசிரியர்கள் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் விவசாய பயிலுனர்கள் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

MICH Hybrid 1 எனும் மிளகாய் வர்க்கம் இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு செத்தல் மிளகாய் உற்பத்தியை ஊக்குவிக்கும் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக இது இடம்பெற்றது. 

சரிவான நிலங்களில் மண்ணரிப்பை தடுத்து மண்வளத்தை அதிகரிக்கும் நோக்குடன் சரிவுக்கு குறுக்காக அணைகள் அமைத்து அதன் மீது தேசிக்கன்றுகளை நடுவதற்கான தேசிக்கன்றுகளும் மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தால் இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .