Mayu / 2024 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
கிழக்கு மாகாணத்தில் கடந்த சில மாதங்களாக கடும் வரட்சி காலநிலையைடுத்து சனிக்கிழமை (10) பெய்த மழை மீனவர்களால் அதிகளவிலான சூடை மீன்கள் பிடிபட்டதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய, காத்தான்குடி ஏத்துக்கால் கடற் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) காலை மீனவர்கள் பெருமளவிலான சூடை மீன்களை பிடித்து விற்பனையில் ஈடுப்பட்டுள்ளனர்.

பிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான சூடை மீன்கள் ஞாயிற்றுக்கிழமை (11) காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரை பிரதேசத்தில் ஒரு கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
சாதாரணமான நேரங்களில் குறித்த மீன் ஒரு கிலோ 700 ரூபா முதல் 800 ரூபாய் வரை விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago