Editorial / 2017 நவம்பர் 17 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்.
மீராவோடை மக்களின் காணி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
மீராவோடை சக்தி வித்தியாலயத்தின் மைதான காணியை பொதுமக்கள் அத்துமீறி ஆக்கிரமித்துள்ளதாக தெரிவித்து அவர்களுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குறித்தகாணி பொதுமக்களுக்குரிய குடியிருப்பு காணி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
காணிப் பிரச்சனை தொடர்பாக கடந்த ஜீலை மாதம் 18ம் திகதி மற்றும் ஓகஸ்ட் மாதம் 15ம் திகதியும் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிடியே சுமந்திரதேரர் தலைமையில் பாரியளவிலான போராட்டங்கள் இடம்பெற்றதுடன், பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் கலவரங்கள் ஏற்பட்டன.
இதனடிப்படையில் வாழைச்சேனை பொலிஸார் காணித் தகராறுகள் தொடர்பாக வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் படி விசாரணைகள் இடம்பெற்றதுடன், வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் ஒக்டோபர் மாதம் 23ம் திகதி குறித்த காணியை பார்வையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago